Disease


கண்அழுத்த நோய்

கிளௌகோமா எனப்படும் கண் அழுத்த நோயானது பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய். பல நேரங்களில் கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதனாலேயே இது விளைகிறது. ஆனால், எப்போதும் இதுவே காரணமாக அமைவதில்லை. இது தனக்கே உரித்தான ஒரு குறிப்பிட்ட முறையில் விழித்திரையின் நரம்பு முடிச்சு அணுக்கள் இழப்பை ஈடுபடுத்துகிறது. கிளௌகோமாவில் அநேக துணை வகைகள் உள்ளன. ஆனால், அவை யாவும் பார்வை நரம்பு இயக்கத்தடை என்பதன் வகைகளாகவே கருதலாம். அதிகரித்த உள்விழி அழுத்தம் (மேற்கூறப்பட்ட22 mmHg or 2.9 kPa) கிளௌகோமா விளைவதற்கான ஒரு முக்கிய ஆபத்துக் காரணியாகும். ஒப்புமையில், சற்றே குறைந்த அளவு அழுத்தத்திலேயே ஒருவருக்கு நரம்புச் சேதம் உருவாகலாம், மற்றொருவருக்கு வருடக் கணக்காக மிக அதிகமான விழி அழுத்தம் இருப்பினும் சேதம் ஒன்றும் விளையாதிருக்கலாம். சிகிச்சை பெறாத கிளௌகோமா நிரந்தரமாக பார்வை நரம்பு சேதத்தில் விளையக் கூடும். இதன் விளைவாக பார்வைத் தள இழப்பு நேர்ந்து அது பார்வையின்மையை உருவாக்கிவிடும். கிளௌகோமாவை பொதுவாக "திறந்த கோணம்" மற்றும் "மூடிய கோணம்" கிளௌகோமா என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். மூடிய கோண கிளௌகோமா திடுமென்று உருவாகக் கூடும், மேலும் அது மிகுந்த வலியுண்டாக்குவது. இதில் பார்வையிழப்பு என்பதானது சடுதியில் விளைவதாக இருக்கும். ஆனால், இதில் உண்டாகும் அசௌகரியத்தினால், நோயாளிகள் நிரந்தர சேதம் உண்டாகும் முன்னரே மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். திறந்த கோண, நாள்பட்ட கிளௌகோமா மெல்ல முன்னேறும் தன்மை கொண்டது. இதில் நோய் மிகவும் முதிர்ந்த நிலையை அடையும் வரையிலும் நோயாளிகள் தாம் பார்வையிழப்பை அடைந்திருக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கக் கூடும். "பதுங்கும் பார்வைத் திருடன்" என்று கிளௌகோமாவிற்கு புனைப்பெயர் உண்டு. ஏனெனில், இதில் பார்வை இழப்பானது பொதுவாக ஒரு நீண்ட கால அளவில் ஏற்படுகிறது; மற்றும் நோய் மிகவும் முற்றிய பின்னரே இது கவனிக்கப்படுகிறது. ஒரு முறை இழப்பு நேர்ந்து விட்டால், பிறகு சேதமுற்ற பார்வைத் தளத்தை திரும்பப் பெறவே முடியாது. உலகெங்கும் பார்வையின்மைக்கான இரண்டாவது காரணமாக முன்னணியில் இது உள்ளது.ஆப்பிரிக்க அமெரிக்க சமுதாயங்களில் பார்வையின்மைக்கு இதுவே முழு முதற் காரணமாக உள்ளது.கிளௌகோமா நோயானது, ஐம்பது அல்லது அதற்குக் கீழ் வயதானவர்களில் 200 பேரில் ஒருவரையும், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்துப் பேரில் ஒருவரையும் பாதிக்கிறது. ஆரம்பக் கட்டத்திலேயே இந்த நிலையைக் கண்டறிந்து விட்டால், பிறகு அது மேலும் முன்னேறிச் செல்வதைத் தடுக்க இயலும் அல்லது மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைமைகள் மூலம் அதன் முன்னேற்றத்தை மட்டுப்படுத்த இயலும்
.
இப்பாதிப்பினால் கண் சிவப்பாகுதல், கண் அழற்சி, மற்றும் பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து பொருள் வெளியேறுதல் ஏற்படுகிறது. பொதுவாக சிறுவர்களுக்கு தொற்று மூலமாகவும் பெரியவர்களுக்கு ஒவ்வாமை மூலமாகவும் கன்ஜக்டிவிடிஸ் ஏற்படுகிறது. இவை இரண்டு வகைப் படும், ஒன்று தொற்று கன்ஜக்டிவிடிஸ், மற்றொன்று ஒவ்வாமை கன்ஜக்டிவி 

கண்வலி

.
கன்ஜக்டிவாவினில் ஏற்படும் தொற்றினை கன்ஜக்டிவிடிஸ்(Conjunctivitis)கண்வலி என்கிறோம். தொற்று ஏற்படுவதினால்,கன்ஜக்டிவாவினில் உள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணிய இரத்த நாளங்கள் பருமனாகி வி
டிஸ்.

அறிகுறிகள் 

எல்லா வகையான கன்ஜக்டிவிடிஸ்களிலும், கண் சிவப்பாகுதல், எரிச்சல், உறுத்தல், பொருள் வெளியேறுதல் மற்றும் ஒளி விரும்பாமை (கடணிtணிணீடணிஞடிச்) தொற்று கன்ஜக்டிவிடிஸில் சீழ் வெளித்தள்ளப் படுகிறது. இதனால் காலையில் விழிக்கும் பொழுது கண் இமைகள் ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்கின்றன. ஒவ்வாமை கன்ஜக்டிவிடிஸில் கண் இமைகள் வீங்கி நிறமற்ற பொருளை வெளித்தள்ளுகின்றன.

சிகிச்சை 

வெதுவெதுப்பான நீர் உபயோகித்து கண் இமைகளுடன் ஒட்டியுள்ள வெளித்தள்ளியுள்ள பொருள்களை நீக்க வேண்டும். நோய் தொற்றுதலைச் சரிசெய்ய கண் சொட்டு மருந்து அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஒவ்வாமை கன்ஜக்டிவிடிஸ் நோயைக் குணப்படுத்த ஆன்டி ஹிஸ்டமைன் கலந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.
 
பூளை 

அல்லது பீளை என்பது கண்ணில் இருந்து வெளிப்படும் வெண்மஞ்சள் நிறத்தில் வெண்ணெய் போன்ற பிசுக்குமை கொண்ட கண்ணழுக்கு. சளி போன்ற பிசுக்குமை மிகுந்த இந் நீர்மம் நீண்ட தூக்கத்திற்கு பின் கண்களின் ஓரத்தில் தேங்கியிருக்கும்.


விழித்திரை விலகல் (Retinal detachment)
 கண்ணில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். விழித்திரையானது கண்ணின் உட்சுவரிலிருந்து உரிவதால் இது ஏற்படுகிறது. ஏறத்தாழ பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இக் குறைபாடு ஏற்படுகின்றது. இக்குறைபாட்டிற்கு ஏற்ற உடனடிச் சிகிச்சை அளிக்காவிடின் பார்வையிழப்பு ஏற்படலாம்.
விழித்திரையில் சிறு துளை அல்லது கிழிவு ஏற்படுவதனாலேயே விழித்திரை விலக நேரிடுகிறது. அந்த இடைவெளியினூடாக நீர்மம் விழித்திரைக்குக் கீழே கசிவதால் கண்சுவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தொடுப்பு நலிவடைந்து விழித்திரை உரிகிறது. இதுவே விழித்திரை விலகலாகும். இவ்வாறு விலகிய விழித்திரையால் உள்வரும் ஒளிக்கதிர்களிலிருந்து தெளிவான படத்தைப் பெற முடியாது.
இக்குறைபாடு பெரும்பாலும் நடுத்தர வயதுக் குறும்பார்வையுடையோருக்கே ஏற்படுகிறது.



No comments:

Post a Comment